மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

  1. தமிழ்நாட்டில் எரி சாராய கடத்தல், போலி மதுபானம் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  2. மாநிலம் முழுவதும் 101 மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.
  3. போலி மதுபான கடத்தலை தடுக்க மாநிலம் முழுவதும் 45 நிரந்தர மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. 2023 – 24 ஆண்டில் எரிசாராய கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 12,431 விஷச் சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,422 குற்றவாளிகள் கைதாகியுள்ளனர். 4.64 லட்ச லிட்டர் விஷச் சாராயம் அழிப்பு.
  5. மெத்தனால் தயாரிக்கும் அனைத்து தொழிற்சாலைகள், மெத்தனால் வைத்திருக்க உரிமம் பெற்ற ஆலைகள் ஆகியவற்றில் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சோதனையிட வலியுறுத்தல்.
  6. மெத்தனால் உரிமம் வைத்திருக்கும் அலகுகளை கண்காணிக்கவும், விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தல்