UGC-NET 2024 தேர்வை ரத்து செய்வதாக
UGC-NET 2024 தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது
முறைகேடு புகார் எதிரொலியாக ‛நெட்’ தேர்வை திடீரென ரத்து செய்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
‛நெட்’ -2024 தேர்வுகள் நாடு முழுதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய சைபர் குற்றப்பிரிவிலிருந்து யு.ஜி.சி.க்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‛நெட்’ 2024 தேர்வு ரத்து செய்யப்படுகிறது. புதிய தேர்வு விரைவில் அறிவிக்கப்படும்.
தேர்வு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, புனித் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 2024 நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ‛நெட’ தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.