உ.பி.யில் 25 தேர்தல் பணியாளர்கள் பலி

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலை:

வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலையால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தால் தேர்தல் அலுவலர்கள் 25 பேர் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான், பீகார், உத்திரபிரதேசம், பஞ்சாப், அரியான, ஒடிசா, டெல்லி, சட்டீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தண்டி சுட்டெரித்து வருகிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் கண்ப்பூரில் நேற்று நாட்டிலேயே அதிகபட்சமாக 118.76டிகிரி ஃபாரண்ஹீட் வெப்பம் தகித்தது. கடும் வெப்பத்தை தாங்கமுடியாமல் சுருண்டு விழுந்த 1,200 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒடிசாவின் 8 மாவட்டங்களில் நேற்று 113 டிகிரி வெப்பம் வாட்டி வதைத்தது. அங்கு நேற்று ஒரேநாளில் வெப்ப அலையால் 10 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் போஜ்பூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் 5 பேர் வெப்ப அலையால் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.