குதிரைவாலி அடை

தேவையானவை:

குதிரைவாலி அரிசி – 1 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா ½ கப்,
கேரட் துருவல் – 1 கப்,
சிவப்பு மிளகாய் – 5,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

அரிசி, பருப்பு களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து, சிவப்பு மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். கேரட் துருவல், உப்பு, பெருங்காயம் கலந்து தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்து எடுக்கவும். பருப்பு, கேரட் சத்துடன் உள்ள அடையை மாலை நேரம் மாணவர்களுக்கு கொடுக்கலாம்.