டெல்லி முதல்வர் ஆஜராக உத்தரவு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8 சம்மன்கள் அனுப்பியது.

அவர் ஆஜராகாததால் கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த செஷன்ஸ் நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், அர்விந்த் கெஜ்ரிவால் நாளை மார்ச் 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி அங்கு முறையிடும்படி உத்தரவிட்டார்.