மாயாவதி மீண்டும் திட்டவட்டம்

எதிர்க்கட்சிகளின் வதந்திகளை நம்ப வேண்டாம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி

 வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற இருக்கிற நடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால், பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த 2 கூட்டணிகளிலும் இடம்பெறாமல் தனித்து களம் காண்கின்றன.

இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் மற்றும் தெலங்கானா மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார்ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சந்திரசேகரராவ் மேலும் கூறுகையில், ‘தெலங்கானாவில் தலித்துகள் மற்றும் பிற மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்.