தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் மார்சி 9ம் தேதி பாகிஸ்தான் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, தற்போது நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று (2024 மார்ச் 1, வெள்ளிக்கிழமை) அறிவிக்கை வெளியிட்டது. நாட்டின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, மீண்டும் பதவியில் அமர்வார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் அல்வியின் ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், பொருளாதார சீர்குலைவு உட்பட நாட்டில் நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக அவர் பதவியில் நீடித்த நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.