மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: NPS விதிகளில் மாற்றம், சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்: முதல்வர் அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் (Central Government Employees) பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல்கள் (Lok Sabha Election) நடக்க உள்ளன. இந்த தருணத்தில் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நவம்பர் 2005 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசாங்கத்தின் (Central Government) தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை செய்ய மகாராஷ்டிரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு இனி கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். இதில் அகவிலைப்படியும் சேர்க்கப்படும்
மேலும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 17,000 காவலர்களை பணியமர்த்துவதற்கான விளம்பரம் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் தெரிவித்தார். இந்த நியமனத்தின் போது மராத்தா இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்