தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.  

தமிழ்நாட்டில் திமுக-வா, பாஜக-வா என மக்கள் முடிவு செய்வார்கள் என்று கோவையில் அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.  கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு அருகே படகு இல்லம் இடம் மாற்றம் செய்யப்படுகிறது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவிலேயே தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதல் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  செயல்பட்டுக் வருவதாக தெரிவித்தார். சுற்றுலா துறையில் இந்தியாவில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், வெளிநாட்டு சுற்றுலா வருகையில் 2 வது இடத்தில் உள்ளதாகவும் இதனை முழுமையாக முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 

அரசியல் குறித்தான தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் எனவும் கூறிய அவர் நீலகிரி தொகுதியில் ஆ ராசா நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றார். 

About The Author