மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது!!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என, ரஷ்ய அரசு ‘டிவி’யில் அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு, உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைனின் தெற்கில் உள்ள கருங்கடல் பகுதியில், நேற்று முன்தினம் ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான, ‘மோஸ்க்வா’ என்ற போர்க்கப்பலை, ஏவுகணைகளை வீசி உக்ரைன் படையினர் தகர்த்தனர். எனினும், தீ விபத்து ஏற்பட்டதால் தான், அந்த கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், ‘ரஷ்யா – 1’ என்ற அரசு தரப்பு ‘டிவி’யில், ‘மூன்றாம் உலகப் போர் துவங்கி விட்டது’ என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் நேரலையில் பேசிய தொகுப்பாளர் ஓல்கா ஸ்கபயேவா கூறியதாவது: ரஷ்யாவின் மோஸ்க்வா போர்க்கப்பல் தகர்க்கப்பட்டுள்ளது. இது, இரு நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் போரை தீவிரமடையச் செய்துள்ளது. மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது என்றும் நாம் கூறலாம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.