கோவை: ஆஸ்திரேலியாவிலிருந்து மிக நீண்ட இழை பருத்தியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த மத்திய அரசுக்கு, ஜவுளி அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
ஆஸ்திரேலியாவிலிருந்து 28 மி.மீ., மற்றும் அதற்கு மேல் நீளம் கொண்ட, மூன்று லட்சம் பேல்கள் மிக நீண்ட இழை பருத்தியை, வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இது, கோவையிலுள்ள ஜவுளித்துறை தொடர்ந்து உயிரோட்டத்துடன் செயல்படவும், திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனங்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், பருத்தி விலையில் ஸ்திரத்தன்மை ஏற்படவும் வழிவகுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author