இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 715 நாட்களுக்கு பின் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு முதல் முறையாக ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 316 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. 
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. 
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 184 கோடியே 70 லட்சத்து 83 ஆயிரத்து 279 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author