கொச்சியில் நிருபர்களிடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறியதாவது: பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோதசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அந்த அமைப்பை தடை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், இந்தஅமைப்பினருக்கு பயிற்சியளிக்கும் பணியில் தீயணைப்பு படையினரை கேரள அரசு ஈடுபடுத்தியுள்ளது கண்டனத்துக்குரியது; இது, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
சிறுபான்மையினரை தாஜா செய்யும் நோக்கில், இதை கேரள அரசு செயல்படுத்தியுள்ளது. இதை உடன் நிறுத்த வேண்டும். நாடு முழுதும் மத மாற்ற தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். ஆசை காட்டி, அச்சுறுத்தி மதம் மாற்றும் செயல்களை தடுக்கவேண்டும். கேரளாவில் ஹிந்து பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றி திருமணம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.