தமிழகம் முழுதும், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், வரும் 9, 10ம் தேதிகளில் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.

தி.மு.க., கொள்கை பரப்பு செயலர்கள் திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., அரசின் பட்ஜெட் அறிக்கையின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

About The Author