சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்களின் டீசர், டிரைலர்களை தங்களது தியேட்டர்களில் திரையிடுகிறேன் என்ற பெயரில் பப்ளிசிட்டி செய்து விபரீதத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர் தியேட்டர்கள் உரிமையாளர்கள்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திளைப்பர். படம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்வதோடு தியேட்டர்களில் பேனர், பிளக்ஸ் என்று தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவர். இப்போது ரசிகர்களை தாண்டி தியேட்டர் உரிமையாளர்களை இதுபோன்ற கொண்டாட்டத்திற்கு வழி வகுத்து அதில் உள்ள அசம்பாவிதங்களை உணராமல் வம்பை விலைக்கு வாங்கி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.