ஒவ்வொரு பருவமழையின் போதும், தென்சென்னையின் முக்கிய பகுதிகளில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில், ஓ.எம்.ஆர்., குறுக்கே, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மற்றும் செம்மஞ்சேரி ஆகிய இடங்களில், 240 கோடி ரூபாய் செலவில், ‘மெகா’ மூடு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே நீர்வழித்தடத்தில் செல்லும் நீரை, மூன்று வழித்தடங்களில் பிரித்து, பகிங்ஹாம் கால்வாய்க்கு அனுப்புவதன் வாயிலாக, தென்சென்னை பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண, இத்திட்டம் கைகொடுக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.