குன்னுார்:குன்னுார் மவுன்ட் ரோட்டில், புதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி பேராசிரியை பியூலா விஜயராணி,55. இவர் தனது புதிய காரில், பணியை முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மவுன்ட்ரோடு-உழவர் சந்தை பிரிவில் திரும்பியபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டதில், ‘பிரேக்’ பிடிப்பதற்கு பதில் ‘எக்ஸ்லேட்டரை’ அழுத்தியுள்ளார்,

எதிர்பாராத விதமாக, கார் கல்லில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இவருக்கும் இவருடன் வந்த பேராசிரியர் ஒருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author