ராஜ்யசபா எம்.பி.,யாகிறார் பிரியங்கா: காங்., தலைமை அதிரடி முடிவு!
காங்., பொதுச் செயலர் பிரியங்காவை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு எம்.பி.,க்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் இறுதியில் நடைபெறும் என தெரிகிறது. இதில் காங்., சார்பில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.