Cut bananas in the plate

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன. வாழையில் உள்ள ‘பிரக்டோஸ்’ போன்ற எளிய சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.

விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ளும்போது இயற்கையான ‘உடனடி எனர்ஜி’ கிடைக்கும். உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்த சோகை போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக் குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

தாது உப்புக்களைப் பொறுத்தவரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

100 கிராம் வாழைப் பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத் துடிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றைச் செய்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author