மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். எம்.ஜி.ஆர் எனக்கு நெருக்கமானவர். அவர் முதல் அமைச்சராக இருந்தபோது தனது கட்சிக்கு அழைத்தும் நான் போகவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் ஒரே கட்சியில்தான் இருப்பேன். எனது தலைவர் கலைஞர். நான் கட்சி மாற மாட்டேன் என்றேன். உனது உறுதியை நான் பாராட்டுகிறேன் என்றார்.அப்படிப்பட்ட கட்சியை காட்டி கொடுப்பவர்கள் துரோகிகள். கலைஞர் பேசி செயல்படுவார். ஆனால் மு.க.ஸ்டாலின் அதிகம் பேச மாட்டார். அவரிடம் செயல் மட்டும்தான் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் காலத்தில்தான் தமிழகம் வளம் பெறப்போகிறது. தொழில் துறை வளரப்போகிறது. திராவிடத்துக்கு பெருமை வரப்போகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்

About The Author