டெல்லி :கார்கிவ் நகரில் இருந்து மாணவர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், பிரதமர் மோடி 2வது முறையாக நேற்றிவு மீண்டும் ரஷ்ய அதிபர் புடினுடனும் தொலைபேசி மூலமாக பேசியதாக தகவல்கள் வெளியாகின. ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் இந்திய மாணவர்கள் உக்ரைன் நகர்களிலேயே சிக்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினும் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலை, குறிப்பாக இந்திய மாணவர்கள் அதிகளவில் சிக்கியுள்ள கார்க்கிவ் நகரின் நிலவரம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.சண்டை நடைபெற்று வரும் பகுதியில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து பிரதமர் மோடி, அதிபர் புடினுடன் விவாதித்தார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினிடம் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவது 2வது முறையாகும்.   
ஏற்கனவே போர் மூண்ட பிறகு அடுத்த நாளான கடந்த 25ம் தேதி இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் புடினுடன் தொலைபேசி வாயிலாக பேசியது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தரப்பில் அறிக்கை

ரஷிய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மேலும் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் உக்ரைன் ராணுவம் தடுக்கிறது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம். இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author