தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த காலங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண முறையை அமல்படுத்தி ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாத மின் கட்டண கணக்கீடு நடத்தி மக்கள் குறையை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தீர்கள்

ஆனால் இதுநாள் வரை மின்சார வாரியமும் அதற்குண்டான அதிகாரிகளோ மக்கள் நலனில் அக்கறை கொண்ட தங்களுடைய அரசு இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏமாற்றத்தை அளிக்கிறது

ஆகையால் தாங்கள் வெகுவிரைவில் இதை பரிசீலனை செய்து மாதந்தோறும் மின் கணக்கீடு நடத்தி மாதாந்திர மின் கட்டணமாக செலுத்தும் நடை முறையை கொண்டுவர தமிழக பொது மக்களாகிய நாங்கள் கோரிக்கையாக வைக்கிறோம்

மக்களின் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு முதல்வர் மற்றும் தங்களுடைய அரசு விரைவில் இதுகுறித்து ஆவண நடவடிக்கையில் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த மாபெரும் பொதுமக்கள் கோரிக்கையை தங்கள் முன் வைக்கின்றோம்

நன்றி
வாழ்க தமிழக முதல்வர்
வளர்க மக்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு

செய்தி
லயன் வெங்கடேசன்
தலைவர்
செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் யூனியன்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.

About The Author