ரவுடி பேபி சூர்யா கைது!!!

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட ரவுடி பேபி சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை சென்ற ரவுடி பேபி சூர்யா. மதுரை, திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி,என்ற ரவுடி பேபி சூர்யா (35). திருப்பூரில் வசிக்கும் இவர், ‘ரவுடி பேபி’ சூர்யா என்ற பெயரில் நடத்தும் ‘யுடியூப்’ சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். அதில் அவருக்கு வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், ‘போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று திமிராக வசனம் பேசுவதும் இவருக்கு வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.