திருப்பத்தூர் மாவட்டம் ஆ.செல்வராஜ்.வெற்றி!!
திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் பேரூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 9 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்.திரு.ஆ.செல்வராஜ். அவர்கள் 278 பெருவாரியான வாக்குகள் பெற்று உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஐ.தமிழரசன் 239 வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் தோல்வியுற்றார். இதனை தொடர்ந்து 8. வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட .திருமதி. ஆ. பூசாராணி. அவர்கள்.296 வாக்குகள் பெற்று உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி.ஏ.ஸ்டெல்லா மேரி 239 வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் தோல்வியுற்றார். இதனை அடுத்து. 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட .திருமதி.ரா. ரஞ்சினி. அவர்கள் 390 வாக்குகள் பெற்று உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட திருமதி. கா.கலைச்செல்வி.அவர்கள்.270 வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் தோல்வியுற்றார்.
தமிழ்மலர் மின்னிதழ்செய்தி சுரேஷ் வாணியம்பாடி.