தொடர் தோல்வியில் தமிழ் தலைவாஸ்..!

2 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 121-வது லீக் ஆட்டத்தில்  தமிழ் தலைவாஸ் மற்றும்  புனேரி பால்டன் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 31-43 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனிடம் பணிந்தது. இது தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வியாகும். மொத்தத்தில் 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 வெற்றி, 9 தோல்வி, 6 டை என்று 47 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.மேலும் நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ் 36-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 44-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பாவையும் வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- தமிழ் தலைவாஸ் (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.