அரசதந்திர தீர்வில் ரஷ்யா நாட்டம்….
வாஷிங்டன்: சில நாள்கள் அல்லது வாரங்களில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்கக்கூடும் என்றாலும் அரசதந்திர ரீதியில் தீர்வுகாணும் வழியையும் ரஷ்யா தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் சொன்னார். அரசதந்திர ரீதியில் தீர்வு காணும் விதமாக பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மேக்ரோன், மாஸ்கோ செல்கிறார். அதற்கு முன், அமெரிக்க அதிபர் பைடன் அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அத்துடன் ஜெர்மன், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் நேற்று உக்ரேனில் சந்திக்கவிருந்தனர்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.