நடிகர் சத்யராஜ் புகழாரம்.

செந்தில்பாலாஜி என்றால் சக்சஸ்….
சக்சஸ் என்றால் செந்தில் பாலாஜி..
நடிகர் சத்யராஜ் புகழாரம்.

கோவையில் இந்துஸ்தான் கல்லூரியில் “ஆற்றல் அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் உடல் உழைப்பாளிகளான துப்புரவு தொழிலாளர்,.தையற் கலைஞர், செருப்பு தைப்பவர், சமையல்காரர், கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர், மாற்றுத்திறனாளிகள்
,திருநங்கையர், தபால்காரர், கூலி வேலை செய்வோர், டிரைவர், மயானத்தில் வேலை செய்பவர், வாட்ச்மேன், செவிலியர், என அன்றாட சாதாரணமான வாழ்க்கையில் இருந்து சாதனை புரிந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் முதன்முறையாக நடைபெற்றது.. நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் மற்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டனர் சுமார் 70க்கும் மேற்பட்ட சாதாரண வாழ்வில் இருக்கும் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இருவரும் பங்கு பெற்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விருதுகளை வழங்கினார்கள்.. மேடையில் விருது வழங்கும் போது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விருதுபெற்ற சலவைத் தொழிலாளி , டிரைவர் , கூலி தொழிலாளி, ஓட்டுநர், தையற் கலைஞர், உள்ளிட்டவர்களிடம் விருது வழங்கி விட்டு ஒவ்வொருவரிடம் மேடையிலேயே அவர்களுக்கு எவ்வளவு சம்பளம், என்ன குறை இருக்கிறது என்பதை கேட்டறிந்து கொண்டிருந்தார்.. விழா நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசும்போது நான் எவ்வளவோ அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறேன் எனக்கு தெரிந்து அரசியலில் தொடர் வெற்றிகளை பெற்றவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் டாக்டர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வரிசையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நான் பார்க்கின்றேன் சுமார் 25 காலம் அரசியலில் பொது வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காமல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறார் செந்தில்பாலாஜி, சினிமா திரையில் நான் அரசியல்வாதியாக நடித்துக் காத்திருக்கிறேன். அரசியல் வசனம் பேசி இருக்கிறேன்.. ஆனால் நிஜத்தில், பொது வாழ்க்கையில்,, வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பொது வாழ்க்கையில் தொடர்ந்து செந்தில் பாலாஜி அவர்கள் 25 வருடம் வெற்றி பெற்றிருப்பது சாதாரணமல்ல.. இது மட்டுமல்ல நான் மேடையிலேயே கவனித்துக் கொண்டிருந்தேன். விருது வழங்கும் போது ஒவ்வொருவரிடம் செந்தில் பாலாஜி அவர்கள் , விருது பெற்றவர்களின் சம்பளம் உள்ளிட்டவைகளை கேட்டறிந்து கொண்டிருந்தார்.. சிலரிடம் அவர் பேசும் பொழுது அவர்கள் சொன்ன கஷ்டத்தை கேட்டு அவர் முகம் மிகவும் சுருங்கி வாடிப்போய் இருந்தது.. வாய் பொய் பேசலாம். ஆனால் கண்ணும் ,முகமும் பொய் பேசாது,, அவர் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவற்றைத் தீர்த்த வைப்பதால்தான் அவரால் அரசியல் வாழ்க்கையில், பொது வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது.. செந்தில் பாலாஜி என்றால் சக்சஸ்… சக்சஸ் என்றால் செந்தில்பாலாஜி தான். அவரை நான் SB என்று இனிமேல் குறிப்பிடுவேன்.. அன்பே வா திரைப்படத்தில் JP என்ற கதாபாத்திரத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிறந்த தொழிலதிபராக வெற்றி மீது வெற்றி குவித்துக் கொண்டு இருப்பார் . அன்பே வா JB போல செந்தில் பாலாஜி என்றால் SB என்று தான் இனிமேல் நான் குறிப்பிடுவேன் என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.. மேலும் சத்யராஜ் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் எறும்பு போலமிக சுறுசுறுப்பாக தமிழகத்தின் நலனுக்காக பணியாற்றிக் கொண்டு இருப்பதாக கூறிய அவர் பிற மாநிலங்களில் முதல்வரை சக நடிகர்கள் புகழ்ந்து கூறுவதை பெருமையாக கருதுவதாகவும் , முதல்வரின் , சுறுசுறுப்புக்கும், நிர்வாக திறமைக்கும் ஈடு கொடுப்பவராக செந்தில் பாலாஜி இருப்பதால்தான் இவரை போன்ற சுறுசுறுப்பான நபர்களை அமைச்சர்கள் ஆக்கி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின், என்று புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு “சாதனை செல்வர்'” என்ற சிறப்பு விருதையும் வழங்கி சத்யராஜ் கௌரவித்தார்..