வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..

காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த வடுவூர் சேர்ந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் வயது 19 இவர் டிப்ளமோ முடித்துள்ளார் இந்த நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் மூலமாக திருப்பூர் வந்தார் ஸ்டாலின் சாமுண்டிபுரம் பகவதி நகரில் தங்கி பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் ஆசை மீடியா நெட்வொர்க் தமிழ் மலர் மின் இதழ் செய்திக்காக திருப்பூர் மாவட்ட முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ்