பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு..

பொழிச்சலூர் ஊராட்சி
2 வார்டு உறுப்பினர் காங்கிரஸ் வேட்பாளர் B.D. ராமு வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் உள்ளாட்சித் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நல்லாசியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், புனித தோமையர் மலை வட்டார காங்கிரஸ் தலைவர் சுதாகர் ஆகியோர் ஒப்புதலோடு பொழிச்சலூர் ஊராட்சி 2 வது வார்டு உறுப்பினர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும்
B.D. ராமு 2021- ஆம் ஆண்டு 06/10/2021 ஆம் தேதி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் ஊராட்சி மன்ற 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தமக்கு ஒதுக்கப்பட்ட ஸ்கூட்டர் சின்னத்தில் ஆதரிக்குமாறு தமது ஆதரவாளர்களுடன் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் B.D. ராமு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சால்வைகள் அணிவித்து மகிழ்ந்தனர்.

செய்தி:இம்ரான் பம்மல் பகுதி செய்தியாளர்