தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 100- வது நாள் சாதனை! துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 2021-ஆம் ஆண்டு போட்டியிட்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக கழகத் தலைவர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் திமுக ஆட்சியின்
100- வது நாள் சாதனைகளை விளக்கி செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் பஜார் வீதியில் புனித தோமையர் மலை ஒன்றிய கழகச் செயலாளர்
திரு/ த. ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்களிடம்
துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

உடன் பொழிச்சலூர் திமுக ஒன்றிய கழக பிரதிநிதி கமல காந்தன், வனஜா தயாளன், ராஜா,
பொறுப்பு குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்.

செய்தி : S.ரவூப்