ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈ.ஓ.எஸ்.-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ (ISRO) வடிவமைத்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திட்டமிட்டபடி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, திட்டமிட்டபடி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

About The Author