பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அப்போது 14 வயதாகி இருந்த டரிகோஷி வெளியே சென்று பார்த்த போது, எந்த விமானத்தையும் பார்க்கவில்லை. ஆனால் வடகிழக்கில் பார்த்த போது வானத்தில் தெரிந்த ஒரு கருப்புப் புள்ளியை கண்டு ஒரு நொடி திகைத்துள்ளார்.

சரியாக 76 ஆண்டுகளுக்கு முன் 1945 ஆகஸ்ட் 6ம் தேதியன்று கற்பனை செய்ய முடியாத ஒரு பேரழிவை உலகம் கண்டது. இரண்டாம் உலகப் போரின் போது கடந்த 1945-ம் ஆண்டு இதே நாளில் காலை 8.15 மணியளவில், வல்லரசான அமெரிக்கா, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது நடத்திய அணு குண்டு தாக்குதலை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அமெரிக்காவின் தாக்குதலில் ஹிரோஷிமா நகரம் கிட்டத்தட்ட 90% அழிக்கப்பட்டு 80,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

62,000-த்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகின. 35,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் அணுகுண்டின் அழிவுகரமான விளைவுகள் குறித்த எச்சரிக்கை மற்றும் உலக நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி “ஹிரோஷிமா தினம்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அணுகுண்டு வெடிப்பால் வெளியான ரேடியேஷன் காரணமாக கொடூர நோய்களுக்கு ஆளாகினர். அதன் பிறகு அந்நகரத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடல் குறைபாடுகள் மற்றும் வேதனை அளிக்கும் நோய்களுடன் பிறந்தது உலகை அதிர்ச்சியடைய செய்தது. இப்படிப்பட்ட வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய ஹிரோஷிமா அணு குண்டுவெடிப்பு நிகழ்வை நேரில் கண்ட சில சாட்சிகளின் விவரங்கள் மற்றும் குண்டுவெடிப்பில் போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் உள்ளிட்டவை குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

கடந்த 2017-ல் 1945 என்ற ஆவணப்பட ப்ராஜக்டிற்காக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் 86 வயதாக இருந்த டரிகோ. இவர் தனது தாயுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்த போது வானில் என்ஜின்களின் ஆழமான சத்தத்தை கேட்டதாக கூறினார். பயங்கர சத்தம் கேட்டதை அடுத்து அப்போது 14 வயதாகி இருந்த டரிகோஷி வெளியே சென்று பார்த்த போது, எந்த விமானத்தையும் பார்க்கவில்லை. ஆனால் வடகிழக்கில் பார்த்த போது வானத்தில் தெரிந்த ஒரு கருப்புப் புள்ளியை கண்டு ஒரு நொடி திகைத்துள்ளார்.

திடீரென்று அந்த புள்ளி அவரது சுற்றுப்புறத்தை நிரப்பும் வகையில் பயங்கர சப்தத்துடன் ஒளி பந்தாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து சூடான காற்று தன் முகத்தில் பலமாக அடித்ததாக டரிகோஷி குறிப்பிட்டுள்ளார். எனவே கண்களை மூடி கொண்டு தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து விட்டதாகவும், தான் ஸ்டெடியாக இருக்க முயன்ற போது, மற்றொரு புறத்திலிருந்து வந்த பலமான காற்று தன்னை அடித்து தூக்கி வீசியதாகவும் பின்னர் தான் மயக்கமடைந்து விட்டதால் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என கூறி உள்ளார்.

About The Author