தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான்.

கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிறைய நபர்கள், கணிசமான அளவில் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார்கள். பெங்களூரு, ஜே.பி. நகரில் உள்ள ஆஸ்டர் ஆர்.வி மருத்துவமனையின் சரும மருத்துவ நிபுணர், ஆலோசகரான மருத்துவர் சினேகா சூட், “கோவிட் தொற்றால் முழுமையாக பாதிப்படைந்து மீண்ட நோயாளிகளுக்கு கடுமையான அளவில் முடி உதிர்கிறது. தீவிரமான தொற்று பாதிப்பு ஏற்பட்டால், முடி உதிர்வு ஏற்படுவது இயல்பானது தான். உடல் நுண்கிருமியின் தாக்குதலை எதிர்கொண்டு, மீண்டு வந்திருக்கும். நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் போது, உடலில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். இதனால் கோவிட் தொற்றிலிருந்து மீண்ட சில வாரங்களுக்கு மிதமானது முதல் கணிசமான அளவில் முடி உதிர்வு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று உடலில் ஏற்பட்ட பாதிப்பையும், உடல் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும், முடி உதிர்தலை அதிகப்படுத்தலாம். ஆனால், 1 முதல் 3 மாதங்களுக்கு பிறகு, நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் டெலோஜென் என்ற நிலையை அடைந்திருந்த முடி, தானாகவே உதிர்ந்து, புதிதாக வளர்வதற்கு வழிவகுக்கும். இந்த நிலையில், ஒரு நாளில் கிட்டத்தட்ட 100 முதல் 200 வரை முடிக்கற்றைகள் உதிரக்கூடும். இந்த விதமான கணிசமான முடி உதிர்வு குறுகிய காலம் மட்டுமே காணப்படும். சில வாரங்களிலேயே, 3 முதல் 6 மாதங்களுக்குள் இந்த நிலை தானாகவே மாறி விடும். அது மட்டுமின்றி, உங்களுக்கு தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போலவே முடி வளர்ச்சி மற்றும் பேட்டர்ன் மீண்டும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆனால், முதல் முறை கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மீளும் போது, அதன் காரணிகளை சரியாகக் கண்டறிய வேண்டும். மிதமான அளவில் உள்ள முடி உதிர்வை உணவு, யோகா, தியானம், சரியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம். முடி உதிர்ந்த இடத்தில் புதிய வளர்ச்சியைக் கண்டால், உங்கள் உடல் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

About The Author