நடிகை ரேகா அம்மன் அவதாரத்தில் எடுத்துள்ள ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

ஆடி மாதத்தையொட்டி அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வேப்பிலைக்காரி அவதாரத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்களில் முழுமையாக வேப்பிலைக்காரியாகவே மாறியுள்ள ரேகா, ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளையும் விடுத்துள்ளார். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால், அம்மனை வழிபடுவதோடு, வீடுகளில் வேப்பிலையை பயன்படுத்தி, தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதில் சிறந்த இயற்கை மருத்துவ குணம் கொண்ட இலை வேப்பிலை எனத் தெரிவித்துள்ள அவர், கிருமிகளை மட்டுமல்லாது மனதில் இருக்கும் நெகடிவ் எண்ணங்களையும் போக்க வல்லது என கூறியுள்ளார். நேர்மறை எண்ணங்களை உருவாக்கி மனதையும் வேப்பிலை தூய்மைப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ரேகாவின் ஃபோட்டோ ஷூட்டை திரைப்பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். ஷோபனா, பிக்பாஸ் ரம்யா உள்ளிட்டோர் ரேகாவின் அம்மன் அவதாரத்தை வெகுவாக புகழ்ந்துள்ளனர். 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ரேகா, கமல், சத்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்தார்

About The Author