மகளிருக்கு பயணச்சீட்டு அதிரடி உத்தரவு ..
இன்று முதல் பேருந்தில் மகளிருக்கு பயணச்சீட்டு வழங்க – தமிழக போக்குவரத்துறை அதிரடி உத்தரவு
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தர். பெருவாரியான வாக்குகளுடன் ஆட்சியை கைப்பற்றிய மு.க.ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். அதன்படி தற்போது ஏராளமான பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. எந்தெந்த வழித்தடத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதை அறியவே டிக்கெட் தரப்படுவதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்கள் கொரோனாவால் மேலும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இருப்பினும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் திமுக அரசு இந்த சலுகையை மகளிருக்கு வழங்கிவருகிறது.
செய்தியாளர்
A அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்