ஆசை மீடியா நெட்வொர்க் சார்பில் சென்னை மாவட்டத்தில் தொடரும் சமூக பணிகள்

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் ஏழை எளியோறுக்கு ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக சென்னை மாவட்டத்தில் ஆங்காங்கே உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதில் சென்னை மாவட்டம், மயிலாப்பூர், சீனிவாசபுரம் 171 வார்டு குடிசை பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நமது ஆசை மீடியா நெட்வொர்க், தமிழ் மலர் மின்னிதழ் சார்பாக செய்தியாளர் காஜா மொய்தீன் தலைமையில் 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டலுடன் இன்று வழங்கப்பட்டது.

செய்தியாளர்
அப்துல் ரஜாக்
தமிழ் மலர் மின்னிதழ்