மக்களின் குறைகளை உடனே தீர்க்கும் திமுக வட்ட செயலாளர்

கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மயிலாப்பூர், 171வது வட்டம் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் ஏற்படும் மின்சாரம் துண்டிப்பு, கழிவு நீர் மற்றும் வெகு நாளாக தேங்கி கிடக்கும் குப்பை போன்ற அணைத்து பிரச்சனைகள் மக்கள் அந்த வட்டத்திற்குட்பட்ட திமுக வட்ட செயலாளர் பா.பொன்னுசாமி அவர்களை தொடர்பு கொண்டவுடன், அவர் நேரில் சென்று பார்வையிட்டு அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் சரி செய்து வருகிறார்.

இதனால் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகள் உடனுக்குடன் சரி செய்ய படுவதால் மக்கள் திமுக வட்ட செயலாளரின் பணி மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் மேலும் இவருடைய பணி என்றென்றும் சிறப்பாக செயல்படவேண்டும் என்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்