அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 5-ம் ஆண்டு தொடக்க விழா வருகிற 15-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10:30 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலக வளாகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கழக கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களோடு தொடக்க விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருக்கிறார் என்று அ.ம.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

About The Author