செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் 72-வது இந்திய குடியரசு நாள் கொண்டாடப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சி மாவட்டச் செயலாளர்
தா.மோ. அன்பரசன் அவர்களின் ஆலோசனையின்படி பல்லாவரம் கண்டோன்மெண்ட் 7-வார்டுகளின் நகர சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் y. உமர் அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடினார்கள். இவ்விழாவில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் 7 வார்டுகளின் நகரச்செயலாளர் பாபு, முஹம்மது அலி, முன்னிலையில் 72-வது குடியரசு திருநாளில் பொது மக்கள் 500 நபர்களுக்கு
1/2 லிட்டர் பால் மற்றும் 300 சிறுவர் சிறுமிகளுக்கு புத்தகம் பென்சில் ரப்பர், மற்றும் இனிப்புகள் வழங்கி பல்லாவரம் கன்டோன்மென்ட்திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு குடியரசுத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்தார்கள்,

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்,

About The Author