Month: January 2021
-
தனி விமானம் மூலம் பறக்கும் கமல்..
தேர்தல் பிரசாரத்துக்காக தனி விமானத்தில் சென்றது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். தேர்தல் பிரசாரத்திற்கு…
-
முதல்வருக்கு ஆசி..
எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்குச் சிரவை ஆதீனங்களும், பேரூர் ஆதீனங்களும், பேரவையினரும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் எங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது . முருக பக்தர்கள் பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
பொங்கல் பரிசு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பில் அரசியல் தலைவர்கள் படங்கள் இருக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 தொகையுடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்தது. மேலும், பொங்கல் பரிசுத்தொகைக்காக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுக தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் இடம் பெற்று…
-
இந்தியாவில் மிக பிரம்மாண்டமான சிவன் சிலை!
கேரளா: இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது கேரள மாநிலம் கோவளம் கடற்கரையில் ஆழிமலை சிவன் கோவிலில் பிரமாண்ட சிவன் சிலை திறக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான சூலத்தை தாங்கி தலையில் கங்கையை சுமந்தவாறு கடற்கரையில் காட்சியளிக்கும் கங்காதரரை பொதுமக்கள் தரிசனம் செய்து செய்கின்றனர். நாட்டிலேயே மிக உயர்ந்த சிவன் சிலை பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞம் பகுதியில் உள்ள ஆழிமலா சிவன் கோயிலில் இந்த உயர்ந்த…
-
பள்ளிக்கல்வி துறை தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் வழக்கமாக ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் விவரங்களை சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை இறுதி செய்து மாவட்ட தலைமை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல்…
-
முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறார் அமித்ஷா!
ஜனவரி 14-ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறார் அமித்ஷா! தமிழக முதல்வர் வேட்பளர் குறித்து வரும் 14-ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக- பாஜக இடையே பிரச்னை உள்ள நிலையில் அமித்ஷா வருகிறார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 -ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான…
-
சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர்
அமெரிக்க பெற்றோர் சீன குழந்தை என்று எண்ணி கொரியன் குழந்தையை வளர்த்து வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர் சீன நாட்டிலிருந்து குழந்தை ஒன்றை தத்து எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அத்தம்பதியினர் குழந்தை வளரும்போது தன் நாட்டு கலாச்சாரத்தையும் தாய்நாட்டையும் தவறவிட்டுவிடக்கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் அந்த குழந்தையை சீன மொழி மற்றும் கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்து வளர்த்து வந்துள்ளனர். மேலும் அந்த குழந்தையை அப்பகுதியில் வாழும் சீன நாட்டைச் சேர்ந்த மக்களுடன் நட்பு…
-
குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்..
சாம்சங் நிறுவனம்4ஜிபி ரேம் குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம்! ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், தற்போது மிகக்குறைந்த விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. சாம்சங் நிறுவனம் தற்போது புதிய வரவாக கேலக்ஸி எம் 02 எஸ் என்ற மாடலை ஜனவரி 7அம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இது தொடர்பான விவரங்ககளை சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி கிடைத்த தகவலின்படி, இதன் விலை ருபாய் 10000த்திற்குள்…
-
டிராகன் பழத்தின் நன்மைகள்!
டிராகன் பழத்தின் தோல்களையும், உட்புறத்தில் வெண்மை நிற சதை பற்றையும் கொண்ட இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள். நன்மைகள் : புற்று நோய்க்கான செல்கள் உருவாவத தடுத்து நம்மை பராமரிக்கிறது டிராகன் அடிக்கடி இடம் மாற்றம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உடல் நல கோளாறுகள், இதர பிரச்சனைகளுக்கும் இந்த பழம் மிகவும் பயன் உள்ளது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி நன்மை தரும்.வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின்…
-
கடன் ஏற்படும் ஜாதக அமைப்பு..
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். இவ்விசயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும்பார்க்க வேண்டும். அதாவது லக்கினாதிபதி பலமிலந்து 6க்குடையவன் பலமானால் கடன் தொல்லை அதிகமாகவே இருக்கும்…. உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குருபகவான் 6ஆம் அதிபதி சூரியன்… இதில் குரு நீச்சமாகி,6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக…










