Month: January 2021

  • அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் டுவீட்

    அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் டுவீட்

    தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் மற்றும்  துணை முதல்வர் மிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்  எனத் தெரிவித்து இருந்தார்.

    read more

  • பள்ளிகள் திறப்பு – கருத்துக்கேட்பு கூட்டம்

    பள்ளிகள் திறப்பு – கருத்துக்கேட்பு கூட்டம்

    தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில்தான் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்தார். 

    read more

  • முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்..

    முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்..

    முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்.ஈரோடு மாவட்டத்தில்.சென்னை, முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6-ம் ந்தேதி காலை 9 மணிக்கு பவானியில் பொதுக்கூட்டம். 10 மணிக்கு கே.எம்.பி. மகாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடல். 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டம். 12 மணிக்கு வாரி மகாலில் வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடல். பகல் 1 மணிக்கு அத்தானியில் வரவேற்பு. 1.30 மணிக்கு…

    read more

  • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று விடியற்காலையில் இருந்து கனமழை இடைவிடாது கொட்டித்தீர்த்தது.  இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 

    read more

  • ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

    ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2021 இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் நின்று விளையாடும். இந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்களும் பயிற்சியை தொடங்கி விட்டனர்.

    read more

  • சென்னை விமான நிலையத்தில்14.00 கோடி ரூபாய் போதை பொருட்கள்

    சென்னை விமான நிலையத்தில்14.00 கோடி ரூபாய் போதை பொருட்கள்

    மார்ச் முதல், நாடே முடங்கி கிடந்தாலும், போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல், சரக்கு விமானங்கள் வாயிலாக, தங்குதடையின்றி நடந்தன. ‘கொரோனா வைரஸ்’ பரவுதலை தடுக்க, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஆமெரிக்கா, எத்தியோப்பியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயக்கப்பட்ட சரக்கு விமானங்களில், மருத்துவ பொருட்கள் என்ற பெயரில், அதிகளவில் போதை மருத்துகள் மற்றும் மாத்திரைகள் கடத்தப்பட்டன.குறிப்பாக, கஞ்சா பவுடர், ஒப்பியம், ‘காட்’ இலைகள், மெத்தாபேட்டமைன் போன்ற போதைப் பொருட்கள், கடத்தி வரப்பட்டன.சென்னை…

    read more

  • இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

    1992ம் ஆண்டு, ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்திலேயே, தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து, பெரும் புகழ் பெற்றார். பல படத்திற்கு இசையமைத்து, ஆஸ்கர் விருதுகள் பெற்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சென்னையில், 1966 ஜனவரி 6ம் தேதி பிறந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான்.

    read more

  • எஃப்.ஐ.ஆர் உங்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டால்..

    எஃப்.ஐ.ஆர் உங்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டால்..

    சட்டம் காக்க யுத்தம் செய்வோம்தொடர் 4, எஃப்.ஐ.ஆர் உங்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) குற்றவியல் வழக்குகளில் சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 154 (1) (எக்ஸ்) இன் கீழ் காவல்துறை முன் தாக்கல் செய்யப்படுகிறது. சிஆர்பிசியின் பிரிவு 2 (சி) இல் வரையறுக்கப்பட்ட அறியக்கூடிய குற்றங்களின் போது மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியும், ஆனால் அறியப்படாத குற்றங்களுக்கு அல்ல. சிஆர்பிசியின் அட்டவணை I, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடிய அறியக்கூடிய…

    read more

  • உலகப் பாவை தொடர்-6

    உலகப் பாவை தொடர்-6

    உலகப் பாவை நுண்ணணுக்கள் ஒன்று சேர்ந்தால்,நூறுகோடி ஆற்றல் தோன்றும்!நுண்ணுயிர்கள்ஒன்று சேர்ந்தால்,நுகர்பொருள்கள் அனைத்தும் மாறும்! எண்ணிக்கை கூடு மானால்,எந்தஒரு பொருளும் ஆற்றல் எண்ணிக்கை நூறு கோடி எட்டுவதே இயற்கைப் பாடம்! மண்ணில்வாழ் மனிதர் தம்முள்வளர்ந்துவரும் பகைமை குன்றிஎண்ணத்தால் ஒன்றி வாழ்ந்தால்எழும்பயன்கள் கோடி! கோடி! உண்மையிதை உணர்ந்தும் நெஞ்சில்ஒருமைப்பா டற்று வாழும்வன்நெஞ்சர் தம்மை மாற்ற வலம்வருவாய் உலக பாவாய்! பேராசிரியர் முனைவர் கு.மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • தற்காப்புக்காக செய்த கொலை..

    தற்காப்புக்காக செய்த கொலை..

    பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில் (IPC 106-ன் படி) விடுதலை செய்தது.திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் கையெழுத்திட்டு வெளியிட்டார்.S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,

    read more