Month: January 2021
-
“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்”அவர்களின் 125 வது ஜனன தினம் இன்று…
இந்திய சுதந்திரத்திற்காக தன் ஆயுளைவழங்கி போராடிய மாவீரர்“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்”அவர்களின் 125 வது ஜனன தினம் இன்று…
-
ஜன-26 மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 26 ம் தேதி பகல் 12.00 மணிக்கு திமுக எம்பி-க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார். S.முஹம்மது ரவூப்…
-
காலிறுதிக்கு முன்னேறிய சிந்து & சமீர் வர்மா?
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் இந்தியாவின் சிந்து மற்றும் சமீர் வர்மா. தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய பேட்மின்டன் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில், மலேசியாவின் கிசோனா செல்வதுரையை வென்ற சிந்து, காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டியை இவர் 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். அதேசமயம், ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றுப்…
-
அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து?தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில…
-
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் தீ என்ற புதிய செயலியை அறிமுகம்!
மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் தீ என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய மறைமலைநகர் தீயணைப்பு துறையினர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் தீ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவு மற்றும் வட மேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி அவர்களின் உத்தரவுப்படி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட அலுவலர் ஜாஸ்மின் அவர்களின் உத்தரவின்படி…
-
ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது. இதனையடுத்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், வரும் 28-ந்தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்
-
சசிகலா சுயநினைவுடன் உள்ளார் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை?
பெங்களூரு: சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம்…
-
இலங்கை கடற்படையின் ஈவு இரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் – கமல்ஹாசன் பேச்சு.
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை: ராமேசுவரம் அருகே கச்சத்தீவு பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல், அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும் கடற்படை கப்பலை மீன்பிடி படகில் மோதவிட்டனர். இதில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள்…
-
பேரறிவாளன் விடுதலை விவகாரம்.
பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார். இந்நிலையில், கவர்னர்…
-
காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு.
விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி உள்ளார் புதுடெல்லி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் உணர்வற்ற அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது. பாலகோட் தாக்குதல் தொடர்பாக…










