156 நாடுகளுக்கு வழங்கிய 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 156 நாடுகளுக்கு வழங்கி வந்த 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் இ-விசாவை கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றிய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால், இந்தியாவுக்கு வருகை தரும் 156 நாடுகளின் குடிமக்களுக்கு விசா விதிமுறைகள் 2019ன்படி வழங்கப்பட்டு வந்த இ-விசா மீண்டும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதே போல், கடந்த 2020 மார்ச் முதல் ரத்து செய்யப்பட்டிருந்த, அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வழக்கமான பேப்பர் விசாக்களும் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கர்கள், ஜப்பானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10 ஆண்டு கால விசாவும் மீண்டும் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

About The Author