அந்த வரிசையில் திருவள்ளூர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வருவது போன்று, வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி சுமார் 200 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். வெள்ளகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரது வீட்டிற்கு காலை 4 கார்களில் 1 பெண் உட்பட 7 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டு போலி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள், வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தாமல் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் சோதனை நடைபெற இருப்பதாக கூறி, சோதனையை ஆரம்பித்திருக்கின்றனர். பாலமுருகன் ரசீது கேட்டதற்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் வந்து ரசீது பெற்று செல்லுமாறு கூறி போன் நம்பர் ஒன்றையும் கொடுத்து சென்றிருக்கின்றனர் அந்த போலி அதிகாரிகள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.