திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அருகே தனியார் விளைநிலத்தில் இறந்து கிடந்த 4 மயில்கள் குறித்து வனத்துறை விசாரணை?
மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பவரது விளைநிலத்தில் சில மயில்கள் நகர முடியாமல் கிடப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து வனச்சரகர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆண் மயில் மூன்று பெண் மயில்கள் என 4 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மயில்களின் உடல்கள் வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லபட்டது. மறவனுர் கால்நடை மருத்துவர் உடற்கூராய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


P.பாலு மணப்பாறை செய்தியாளர்

About The Author