விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முக்கிய வீதி வழியாக வந்து கோயிலில் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். பூக்குழி திருவிழாவை காண திருவில்லிபுத்தூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்