S-2 மீனம்பாக்கம் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு/ சுந்தர்ராஜ் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு!
தமிழக போக்குவரத்து காவல்துறை சார்பில் S-2 மீனம்பாக்கம், S-3 ஏர்போர்ட், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு/ பாபு அவர்கள் ஆலோசனைப் படி S-2 போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு/ சுந்தர்ராஜ் தலைமையில் பல்லாவரம் மேம்பாலம் இங்கிலீஷ் எலக்ட்ரிகல் சிக்னல் அருகில் போக்குவரத்து தலைமை காவலர்கள் விஜயகுமார், சந்தோஷ், போக்குவரத்து பணியில் ஈடுபட்டனர். இந்த போக்குவரத்து காவல் விழிப்புணர்வில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இருசக்கர வாகனங்களில் சாலைகளில் வேகமாக செல்லக்கூடாது மற்றும் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் நிலுவையில் இருக்கவேண்டுமென வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு/ சுந்தராஜ் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். செய்தி:S.MD. ரவூப்
