மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்., 24ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் 52 வது நாளை எட்டியுள்ளது. இதற்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைன் நாட்டிற்கு நிதி மற்றும் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. அதில் பிரிட்டனும் அடக்கம். உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை தந்து உதவியதுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.

About The Author