சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு.இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் , S.A சந்திரசேகர் , Y.G.மகேந்திரன் , S.J.சூர்யா , கருணாகரன் , பிரேம் ஜி , டேனியல் போப் , முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து பின்னணி பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தீபாவளி தினத்தன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்மலர் செய்தியாளர் ம.ஜான் தினகரன்

About The Author