பிரதமர் மோடி முன்னிலையில் பொக்ரானில் வரும் 7 ஆம் தேதி இந்திய விமானப் படையின் மிகப்பெரிய விமானப் பயிற்சியான வாயு சக்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதன்முறையாக ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்வர் மாவட்டம் பொக்ரானில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாயு சக்தி என்ற பெயரில் விமான ஒத்திகை நிகழ்ச்சியை இந்திய விமானப்படை நடத்தி வருகிறது. அதன்படி வரும் 7 ஆம் தேதி வாயு சக்தி ஒத்திகையை இந்திய விமானப் படை நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
காலை 10.30 மணி முதல் பகல் 12.30 மனை வரை நடைபெற உள்ள இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மொத்தம் 148 விமானங்கள் பங்கேற்க உள்ளன. இவற்றில் 109 விமானங்கள் போர் விமானங்கள் என்றும், ஜாக்குவார், ஜூகோய் 30, மிக் 29, தேஜாஸ், ரஃபேல், மிராஜ் 2000 ஆகிய விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாகவும் இந்திய விமானப் படை கூறியுள்ளது. எந்த சூழ்நிலையும் சமாளிக்க முழுமையான நடவடிக்கைக்கு விமானப்படை தயார் நிலையில் இருப்பதை காட்டவே இந்த ஒத்திகையை விமானப்படை நடத்துவதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.